திருச்சியில் அதிகாலையில் ஹோட்டல் மீது கையெறி குண்டுவீச்சு!
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகில் உள்ள மகஷே் என்பவருக்கு சொந்தமான செந்தூர் ரெசிடென்சி எனும் உணவு விடுதி உள்ளது. இங்கு இன்று காலை 6 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிச்சென்றனர். இதில் உணவகத்தின் முன்பக்க பிரமாண்ட கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- ஜே.டி.ஆர்