ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 40 லட்சம் மதிப்புள்ள 850 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த பிரபு(28), நந்தகுமார்(30), ஜெயராம்பாபு(31) ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், விசாகப்பட்டினம் மாவட்டம், எல்லமஞ்சிலி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்த கஞ்சாவை சென்னைக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.