Skip to main content

அனிதாவின் நிலை அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு உள்ளது

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
அனிதாவின் நிலை அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களுக்கு உள்ளது



சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் .G.R.ரவீந்திரநாத் பேட்டி.

தமிழகத்தில் நீட் தேர்வால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியாமல் மாணவி அனிதா தற்கொலை சம்பவம் உலக தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்படும் அபாயம் என குற்றச்சாட்டு.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் மன உளைச்சலில் உள்ள மாணவர்கள் அனிதா போன்று முடிவு எடுத்தால் எடப்பபாடி பழனிச்சாமி அரசே பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கை. இதை வலிறுத்தி போராட்டம் நடத்தும் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் மிரட்டுவதாகவும் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு.

மருத்துவ படிப்புகளுக்காக டாக்டர் MGR பல்கலைக்கழகத்தை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் ஒரு மருத்துக் கல்லூரியை தமிழக அரசு நடத்துவது ஏன் என டாக்டர் ரவீந்திரநாத் கேள்வி. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு நேரடியாக ஏற்று மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றார்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்