Advertisment

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 67,468 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு கரோனாவால் பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி சிகிச்சை முடிந்து நேற்று (24.06.2020) மீண்டும் பணிக்குத் திரும்பினார். அவரை வரவேற்கும் விதமாகக் காவல் நிலையம் முன்பு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பொதுமக்கள் மலர் தூவியும், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை ஆணையர் சுதாகர், துணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் மலர்க்கொத்துகொடுத்தும் வரவேற்றனர்.