கடலூர் மாவட்டத்தில் 56 பேருக்கு டெங்கு
கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே முன்னிலையில் தமிழ்நாடு அனைத்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் செய்திதியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் 5 பேர், கடலூர் பகுதியில் 33 பேர், நெல்லிக்குப்பம் பகுதியில் 6 பேர், பண்ருட்டி பகுதியில் 3 பேர், விருத்தாசலம் பகுதியில் 9 பேர் என மொத்தம் 56 பேருக்கு தீவிர டெங்கு நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டதால் டெங்கு நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், உள்ளாட்சிகளிலும் சுகாதார துறையினர் டெங்கு நோய் மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சுந்தரபாண்டியன்