Skip to main content

நாகை மீன்வளத்துறை இனைஆணையரை முற்றுகையிட்டு மீனவபெண்கள் தர்ணா

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
nagai

 

மீன்பிடித்தடைக்கால நிவாரண தொகை மூன்று மாதங்களாகியும் வழங்காததால் நாகப்பட்டினம் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலக வாசலில் அமர்ந்து மீனவ பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
மீன்பிடித் தடைகாலத்தின்போது மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு ஆண்டுதோறும் தடைக்கால நிவாரணமாக  குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்கி வருவது வழக்கம்.

 

 ஆனால்  நாகை மாவட்டத்தில் உள்ள 64 மீனவ கிராமங்களில் வசிக்கும்  சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவக்குடும்பங்களுக்கு நிவாரண தொகை எப்போதுமே முறையாக வழங்கபடுவது இல்லை என்கிற குற்றசாட்டு தொடர்ந்து இருக்கிறது. 

 

இந்நிலையில், ஏப்ரல் மாதம் வழங்கவேண்டிய மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை இதுவரை நாகை, அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர், கல்லார் உள்ளிட்ட பல மீனவகிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு வழங்கவில்லை. தொடர்ந்து கேட்டும் கிடைக்காத விரக்தியில் இருந்தநிlலையில்.  மீனவ பெண்கள் இன்று நாகையில் உள்ள மீன்வளத்துறை இணைஇயக்குனர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். 

 

 புகாரை வாங்கிய இயக்குனர் ரீனாசெல்வின் சரிவர பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த மீனவபெண்கள் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உடனடியாக வழங்ககோரி மீன்வளத்துறை அலுவலக  வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாழ்வாதாரம் இல்லாத சமயத்தில் வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை இதுவரை வழங்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியனர். 

 

 மேலும், மீனவர்களுக்கு வழங்கவேண்டிய நிவாரண தொகையை உடனடியாக வழங்கவில்லை என்றால் மீன்வளத்துறை அலுவலகத்தை விட்டு வெளியேறமாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்ததால்.   மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது பிறகு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்