மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி!
மும்பை ரயில்நிலைய நடை மேம்பால தகரக்கூரை விழுந்ததால் ஏற்பட்ட பீதியில் நெரிசல் ஏற்பட்டு 22 பேர் பலியாகினர்.

மும்பையில் இன்று காலை திடீரென்று கனமழை பெய்ததைத் தொடர்ந்து எல்பின்ஸ்டன் ரயில்நிலைய நடை மேம்பாலத்தில் மக்கள் குவியத் தொடங்கினர். அப்போது, பாலத்தின் மேலிருந்த தகரக்கூரை சரிந்து விழுந்தது.
அப்போது, மழைக்கு ஒதுங்கிய மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. அவர்கள் பதற்றத்தில் பாலத்திலிருந்து இறங்க முயற்சித்தனர். இதையடுத்து நெரிசலில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.