Skip to main content

‘வேலைவாய்ப்பின்மையின் தாக்கம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்’ - யஷ்வந்த் சின்கா

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
‘வேலைவாய்ப்பின்மையின் தாக்கம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும்’ - யஷ்வந்த் சின்கா

வரும் 2019ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேலைவாய்ப்பின்மையின் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என மூத்த பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆளும் பாஜக அரசு அமுல்ப்படுத்திய திட்டங்கள் குறித்து வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், மூத்த பாஜக தலைவருமான யஷ்வந்த் சின்கா விமர்சித்து வருகிறார். குறிப்பாக ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இது நாடு முழுவதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தியாவில் நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசிய அவர், ‘இந்தியாவில் நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதுள்ள பாஜக அரசு ராமர் கோவில் கட்டுவது, காஷ்மீரின் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 370ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை மிகப்பெரிய முன்னேற்றங்களாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும். ஆனால், அது நாடு தழுவிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து பேசுகையில், ‘ஒருவேளை நான் நிதியமைச்சராக இருந்திருந்தால், நிச்சயமாக பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்திருப்பேன்’ என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்