மத்திய அரசின்புதியவேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டங்கள் 35வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும்இடையே 6 ஆம் காட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததே, விவசாயிகள் வீதிக்குவர காரணம் என போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் விவசாயஅமைப்பு விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாரதியகிசான்யூனியன்அமைப்பு, "அரசாங்கம் பயப்படும் அளவிற்கு வலுவான எதிர்க்கட்சி நாட்டில்இருப்பது அவசியம். ஆனால் இங்கு அவர்கள் பயப்படுவதில்லை. இதனால்தான் விவசாயிகள் வீதிக்குவரவேண்டியதாகவிட்டது. எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக, கூடாரத்தில் அமர்ந்து வீதியில்போராட்டம் நடத்தவேண்டும்" எனகூறியுள்ளது.