கேரளா, மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக திட்டம்!
பாஜகவின் தேசிய பொதுக்குழு நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தொடர்ந்து அரசியல் கொலைகள் நடந்துவருவதாக பாஜக சமீபகாலமாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 13 - 17 தேதிகளில் பிரச்சாரம் நடத்தப்போவதாக அமித்ஷா இன்று தெரிவித்துள்ளார். இந்த பிரச்சாரத்தில் கேரளாவில் இடது முன்னணி அரசின் ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரித்துள்ளதாக பிரச்சாரம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் பாஜகவை பலமான கட்சியாக அமைக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், புபனேஷ்வரில் நடக்கவுள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு 110 நாட்கள் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.