sachin pilot indterview about rajasthan politics

Advertisment

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி வதேரா, கே.சி.வேணுகோபால் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பேசினார் சச்சின் பைலட்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ள அவர், "நானும், மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் எழுப்பிய சில முக்கிய பிரச்சனைகளுக்கு பின்னர், அதனைத் தீர்ப்பதற்கு காங்கிரஸால் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எழுப்பிய பிரச்சனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அரசியலில் தீமை அல்லது தனிப்பட்ட பகைமைக்கு இடமில்லை. எங்கள் சந்திப்பில், பிரியங்கா ஜி மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எங்கள் குறைகளைப் பொறுமையாக கேட்டறிந்தார்கள். நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. பொதுமக்களுக்கு நம் மீதுள்ள நம்பிக்கையையும் வலுப்படுத்தும் திசையில் நாம் பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.