Skip to main content

கரோனாவால் உயிரிழந்த தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்யப் பயந்த மகன்... 50 மீட்டர் தூரத்தில் நின்று அழுத துயரம்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 1.77  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

n



இதனால் பொதுமக்கள் அரசு கூறியபடி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சில இடங்களில் கூட்ட நெரிசல் சம்பவங்களும் நடைபெறுகின்றது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் கரோனா பாதித்த தந்தையின் இறுதிச் சடங்கைச் செய்ய மகன் பயந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிராயு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதனை அடுத்து அவரது மகனுக்குத் தகவல் கொடுத்த அதிகாரிகள் தகனம் செய்யும் இடத்திற்கு மகனை அழைத்து சென்றனர். ஆனால் அப்பாவின் அருகில் வர பயந்த மகன் சில மீட்டர் தூரத்தில் நின்று, அழுதுகொண்டு இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த அரசு அதிகாரிகள் அந்த முதியவருக்கு அவர்களே இறுதிச் சடங்கைச் செய்தனர். இந்தச் சம்பவம் கரோனாவின் அவலத்தைக் காட்டுவது போல் இருந்தது.

 

சார்ந்த செய்திகள்