Skip to main content

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி; பதவியேற்பு

 

New Chief Justice of Madras High Court; Inauguration

 

உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.

 

பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு அதனைக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கங்கா பூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கங்கா பூர்வாலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு மே மாதம் சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதியின் பதவியேற்பில் அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !