/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hjhjhgh.jpg)
புதுச்சேரி மாநிலம், பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்தனவேலு. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான இவர் தனது தொகுதியிலுள்ள கிராமங்களில் செயல்படுத்த கூடிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று கூறி, கடந்த ஜனவரி மாதம் 01-ஆம் தேதி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீீதுதுணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் ஊழல் புகார்கள் கூறினார். அதனையடுத்து அவர் கட்சிக்கு எதிராக செய்யப்படுவதாகக்கூறி ஜனவரி 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு கொறடா அனந்தராமன், சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் புகார் அளித்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்ட உறுப்பினர் தனவேலுவை சட்டமன்ற பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு தனவேலுக்குபல தடவைநோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேசமயம் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தனவேேலுவை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் ‘கட்சிக்கு எதிராக செய்யப்பட்டதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15-ல் இருந்து 14 ஆக குறைந்துள்ளது. கூட்டணி ஆட்சியாக தி.மு.க 3, சுயேட்சை ஒருவர் என 18 பேர் உள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக்கூறி பதவி பறிக்கப்பட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)