Skip to main content

இது வெஸ்டர்ன் சென்ட்டிமெண்ட்!

Published on 31/10/2017 | Edited on 31/10/2017

இது வெஸ்டர்ன்சென்ட்டிமெண்ட்!

உறவு,பாசம் என்றாலே அது கிழக்கத்திய தேசங்களுக்குரியது என்ற மனோபாவம் உண்டு. அதுவும் இந்தியர்களாகிய நம்மை பாசத்தில் யாரும் விஞ்சமுடியாது என்று நினைக்கிறோம்.

அதைத்தகர்க்கும் விதத்தில்இங்கிலாந்தின்லிவர்பூல் நகரத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

டாமுக்குஎண்பது வயது. திருமணம் செய்துகொள்ளவில்லை. இனியும் தனியாக வசிக்கமுடியாதென கருதிய அவர், தன்னைக் கவனித்துக்கொள்ளவும் பராமரிக்கவும் ஆள் தேவை என நினைத்ததால் மோஸ்வியூ கேர் ஹோமில் சேர்ந்தார்.


கிட்டத்தட்டஒரு வருடம் முடிந்தநிலையில்தான் அந்த ஆச்சர்யம் நடந்தது. என்னதான் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தாலும் தன் மூத்த மகன் டாமை தானும் உடனிருந்து கவனித்துக்கொண்டால்தான் சரியாய் இருக்கும் என நினைத் அடா ஹீட்டிங், தானும் முதியோர் இல்லத்துக்கு வந்துவிட்டார். அடாவுக்கு வயது அதிகமில்லை 98 தான்.

தினசரி டாமின் அறைக்குச் சென்று காலையில் குட்மார்னிங் சொல்வேன். இரவில் சென்று குட்நைட் சொல்வேன். சொல்லிவிட்டுத் திரும்பும்போது, அவன் கைகளை விரித்தபடி வந்து அணைத்து விடைதருவான்என்கிறார் அடா.

எந்தஒரு வேலைக்கும் குறிப்பிட்ட காலகட்டம் உண்டு. அதற்குமேல் அந்த வேலையைத் தொடரமுடியாது. ஆனால், இத்தனை வயதுவரைதான் அம்மாவாக இருக்கமுடியுமென ஏதும் வரம்பிருக்கிறதா என்ன!

அம்மாவும்தன்னுடன் அந்த முதியோர் இல்லத்தில் இருப்பது டாமுக்கு சந்தோஷம் தருகிறதாம். பாசத்துக்கு கிழக்கு மேற்கு என்று பேதமில்லையென நிரூபித்திருக்கிறார்கள் இந்த அம்மாவும் மகனும்.

- க.சுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்