சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவு.

Advertisment

முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

Advertisment

chennai flex issue subashree incident jayagopal police search in trichy

இந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு காவல்துறை சார்பில், கடந்த 20- ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறை ஆகிவிட்டார். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக ஜெயகோபாலின் தொலைபேசி சிக்னலை வைத்து, ஒகேனக்கல் மற்றும் திருச்சியில் தனிப்படை போலீசார் அதிரடியாக விசாரணை செய்து வருகின்றனர்.