2017ஆம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு!
2017ஆம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு சுவீடன் நாட்டின் நோபல் அகாடமியின் சார்பில் நோபல் பரிசு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் இயற்பில துறைக்கான நோபல் பரிசு ரெய்னர் வீஸ், பேர்ரி சி.பேரிஸ் மற்றும் கிப் எஸ்.தோர்னி ஆகிய மூவருக்கும் வழங்கப்படவுள்ளது.
லிகோ உணர்விகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் இவர்களது பங்களிப்பு மற்றும் புவி ஈர்ப்பு அலைகள் குறித்த சோதனைகளில் சிறந்து விளங்கிய காரணத்தால் இவர்கள் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த ஆய்வு விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள், சுவீடனில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற இடத்தில் வைத்து வெளியிடப்பட்டன. பரிசுத்தொகையான 1.1 மில்லியன் டாலர் இம்மூவருக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
- ச.ப.மதிவாணன்