Skip to main content

“தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும்” - பாகிஸ்தான் கோரிக்கை!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

Pakistan demands International countries should provide appropriate assistance

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன.  பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்தியாவுடனான எல்லையில் நிகழும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டுப் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடைய தலைவர்களுடன் பாகிஸ்தானின் வெளியுறத்ததுறை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிரதமர் மூலம் தொலைப்பேசி வாயிலாகப் பேசி தாக்குதலை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சர்வதேச நாடுகளுடைய தலைவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தானுடைய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. அதற்குத் தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும். இந்தியாவுடனான எல்லை பிரச்சனை  விவகாரத்தில்  ஒரு முடிவு ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்