Bus overturns, 21 people lose their live

அரசு பேருந்து கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்த சம்பவம் இலங்கை கம்பாலவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இலங்கை குருணாகலில் இருந்து கதிர்காமம் நோக்கி இலங்கை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கம்பால பகுதியில் இன்று அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது செங்குத்தான பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்து 21 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment