பாகிஸ்தானில் ஏற்பட்ட தொடர் மழையின் போது மின்னல் தாக்கி, 24 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், தார்பார்க்கர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் இடையே பயங்கர மின்னல் ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள மித்தி, சாச்சீ , ராம்சிங் சோதா ஆகிய கிராமங்களை அடுத்தடுத்து, பயங்கர இடி முழக்கத்துடன் மின்னல் தாக்கியது.

Advertisment

df

இதில் 10 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், மின்னல் தாக்கியதில் உடல் கருகி இறந்தன.