தமிழ் கலாசாரத்தை உருமாற்ற விடமாட்டோம்: மாஃபா. பாண்டியராஜன்
Published on 03/10/2017 | Edited on 03/10/2017
தமிழ் கலாசாரத்தை உருமாற்ற விடமாட்டோம்: மாஃபா. பாண்டியராஜன்
தமிழ் கலாசாரத்தை உருமாற்ற விடமாட்டோம் என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை வடபழனியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அளித்த பேட்டியில்: கீழடியில் அகழ்வாராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் வரலாற்றையும், தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றையும் எந்தவிதத்திலும் முறையற்று உருமாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் எல்லாவிதமான பங்களிப்பும் தமிழக அரசு மூலமாக தொல்லியல் துறை செயல்படுத்தும். கலை பண்பாட்டு துறை மூலமாக செயல்படுத்தும். இவ்வாறு கூறினார்.