புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா!
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் கூனார் கட் என்கிற கலை மற்றும் திறன் மேம்பாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான இந்த பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி தொடங்கபட்டது.

மத்திய அமைச்சர் முக்தா அப்பாஸ் நக்வி, முதலமைச்சர் நாரயணசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை உட்பட பல வட மாநில உணவு வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
8 மாநிலங்களின் உணவு அரங்கம்,16 மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
- சுந்தரபாண்டியன்