
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10/05/2021 அன்று காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் ஒரே நாளில் 6,297 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 91 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,53,576 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 23,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 14,26,915 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 365 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 187 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 178 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 18,743 ஆக அதிகரித்துள்ளது.