Skip to main content

தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும்  தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர்!

Published on 08/05/2025 | Edited on 08/05/2025

 

Collector issues prohibitory orders for the entire Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சியில் மே 9,10 மற்றும் 11 தேதிகளில்   வீரசக்கதேவி ஆலய திருவிழா மூன்று நாட்கள் லட்சக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் நடைபெற உள்ளது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுவுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டு, சட்டம் ஒழுங்கினை கருத்தில் கொண்டும், இன்று (08.05.2025) மாலை 6 மணி முதல் வரும் 11 ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பிஎன்எஸ் ஆக்ட் 2023 பிரிவு 163(1) ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள்  ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

சார்ந்த செய்திகள்