ராணுவ மருத்துவர்களை பணியமர்த்தி அவசர நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்: பி.ஆர்.பாண்டியன்

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களில், ராணுவ மருத்துவர்களை பணியமர்த்தி அவசர நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் முதல்வருக்கு
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமப் பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மாணவ மாணவிகள், என அனைவரும் மிகுந்த பாதிப்பிற்க்குள்ளாகி உள்ளனர். உயிரிழப்புகள் தொடர்வது வேதனையளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இடவசதியோ படுக்கை வசதி இன்றி தவிக்கிறார்கள். மேம்படுத்தப்பட்ட மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்தி தேவையான மருத்துவர்களை நியமித்து சிகிச்சை முறைகளை விரிவுப்படுத்த வேண்டும்.
அவசரம் கருதி பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை உடன் விடுவித்து கிராமப்புற மருத்துவ பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பணியாற்றுவதற்க்கு ஆய்வக உதவியாளர்கள் நியமனம் செய்திட வேண்டும். 4 மணி நேரத்திற்க்கு ஆய்வு அறிக்கை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
மருத்துவமனைகளில் சிகிச்சை வசதி இல்லாததால் நோய் தாக்கம் அதிகரிக்கும் வரை காத்திருந்து கடைசி நேரத்தில் மேல் சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளக்கு அனுப்பி வைப்பதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்புகள் தொடர்கிறது.
எனவே இரத்த அணுக்கல் கூட்டுவதற்க்கான சிகிச்சை அளிப்பதற்க்கான அனைத்து வசதிகளையும், மாவட்ட, தாலுக்கா மருத்துவமனைகளிலும் ஏற்படுத்திட வேண்டும். பேரிடர் கால வழிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவமைனைகளில் அரசே இலவசமாக சிகிச்சை அளிப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.
தேவையானால் ராணுவ மருத்துவ குழுக்களையும், அண்டை மாநில மருத்துவர்களையும் வரவழைத்து கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுகிறேன். தன்னார்வ ,சேவை அமைப்புகளையும் ஈடுபடுத்த வேண்டும்.
அரசு செயலர் அளவிலான உயர் அதிகாரிகளை மாவட்டங்களில் கண்கானிப்பு அலுவலர்களாக நியமித்து ஒருங்கினைத்து செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.