அண்ணா பல்கலைக்கழகம் பகவத்கீதையை பாடமாக அறிவித்தது எனக்கு தெரியாது அப்படி தெரிவித்திருந்தால் அதை நான்வரவேற்கிறேன் என அமைச்சர் மாஃபாபாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

Minister Mafa Pandiyarajan

சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

Advertisment

பகவத் கீதையை சமய நூலாக நான் பார்க்கவில்லை அதை பண்பாட்டு நூலாகவே பார்க்கிறேன். அண்ணா பல்கலைக்கழகம் பகவத்கீதையை பாடமாக அறிவித்தது எனக்கு தெரியாது அப்படி தெரிவித்திருந்தால் அதை நான்வரவேற்கிறேன் என்றார்.

இதற்கு முன்னரே செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பகவத்கீதை குறித்த அந்த பாடமானது விருப்ப பாடமாகவே உள்ளது என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment