Skip to main content

இனிப்பு, பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று கட்டாயமாக திணிக்க கூடாது

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
இனிப்பு, பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று கட்டாயமாக திணிக்க கூடாது 

பால் கூட்டுறவு சங்கங்களில் இனிப்பு, பட்டாசு போன்றவற்றை பால் உற்பத்தியாளர்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயமாக தினிக்க கூடாது என்று கீரமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியக்குழுக் கூட்டம் கீரமங்கலத்தில் செல்வகுமார் தலைமையில் மாவட்டப் பொருப்பாளர் சுந்தராரன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களை ஒன்றியச் செயலாளர் மணி வாசித்தார்.

இனிப்பு, பட்டாசு கட்டாய விற்பனை கூடாது :

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடந்த சில மாதங்களாக ஆவின் உற்பத்திகளை உற்பத்தியாளர்களிடம் கொடுத்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதே போல தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு பால் உற்பத்தியாளருக்கும் ரூ. 1000 வரை இனிப்பு, பட்டாசுகளை கட்டாயமாக கொடுத்து பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று சங்கங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் அதிர்ப்த்தி அடைந்துள்ளனர். அதனால் ஆவின் உற்பத்திகளை கட்டாயமாக தினிக்க கூடாது.

கிராமப்புற வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.
மாவட்ட தலைநகரில் போராட்டம் :

கீரமங்கலம், ஆலங்குடி போன்ற பேரூராட்சி பகுதிகளுக்கும் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள தினக் கூலி ரூ. 203 முழுமையாக வழங்குவதுடன் வரும் காலங்களில் தினக் கூலியாக ரூ. 400 வழங்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6 ந் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பகத்சிங்

சார்ந்த செய்திகள்