Skip to main content

பாதுகாப்பை பொதுமக்களிடம் உறுதிபடுத்துங்கள்! -திருச்சி மண்டல ஐஜி

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 


காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் இல்லாத காவல்நிலையமும் இல்லை, காவல்துறை வாகனமும் இல்லை. இந்த வாசகம் வெறும் வார்த்தைகள் அல்ல எனவே அதை பொதுமக்களிடம் உங்களின் செயல் மூலமும், பாதுகாப்பின் மூலம் உறுதிபடுத்த வேண்டியது நம் கடமை என்று கூறியிருக்கிறார் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம்.


திருவிடைமருதூரில் நேற்று முன்தினம் 24.12.2020 சோழபுரம் பகுதியில் காரல் மார்க்ஸ் என்பரால் முன்விரோதம் காரணமாக அருண் என்பவரின் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. இதில் தாக்குதலுக்கு உள்ளான அருண் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோதகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த பகுதி சமூக விரோதிகளால் நிரம்பிள்ளதாகவும், 10 நாட்களில் 7 கொலைகள் நடந்த கொடூரமான பகுதியாக இந்த திருவிடைமருதூர் விளங்குகிறது. எனவே பொதுமக்களிடம் உள்ள இந்த பயத்தை போக்கவும், அவர்கள் அச்சப்படாமல் வாழவும், அவா்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். 


எனவே பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினா் ஒரு அணிவகுப்பை நடத்தி பொதுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தி காட்டுங்கள் என்று உத்தரவிட்டுருந்தார். இதனால் நேற்று 25.12.2020 காலை காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

 

இதில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம் அணிவகுப்பில் கலந்து கொண்டு அவா்களோடு நடந்து சென்று, மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி உள்ளனா். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த அச்சத்தை நீக்கியது. மேலும் இந்த கொலை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட காவலா்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவா்களை தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

 

தவறு யார் செய்தாலும் அவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பயமில்லாமல் குற்றச்செயல்கைளை தடுக்க முன்வாருங்கள், என்று பொதுமக்களுக்கு ஐஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்