Published on 21/09/2021 | Edited on 21/09/2021

திருச்சி மாவட்டம் வளநாட்டுக்கு, மதுரை கொட்டாம்பட்டி என்ற பகுதியில் இருந்து பெனட்டின் எனும் கெமிக்கல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ட்ராக்டர் ஒன்று வந்துள்ளது. மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரத்தில் உள்ள 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
டிராக்டரை ஓட்டி வந்த விஜய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளநாடு காவல்துறையினர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கவிழ்ந்த டிராக்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.