kalaingar Birthday Celebration at amma Restaurant!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமானகலைஞரின் 98 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கட்சி பொறுப்பாளர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. திமுகவினர்தங்கள் பகுதியில் உள்ள கட்சி அலுவலகங்களிலும், வீடுகளிலும் முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்தில் மூன்று நேரமும் அப்பகுதியில் இருக்க கூடிய பொதுமக்களுக்கு இலவசமாக சாப்பாடு மற்றும் டிபன் கொடுக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டதின் பேரில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அம்மா உணவகத்தில் வந்து சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

Advertisment

kalaingar Birthday Celebration at amma Restaurant!

இந்தநிலையில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஏற்பாட்டில் வெஜிடேபிள் பிரியாணி, தயிர்சாதம், லட்டு, முட்டை ஆகிய உணவு வகைகளை தங்களது சொந்த செலவில் அம்மா உணவகத்தில் தயார் செய்தனர். தயார் செய்யப்பட்ட பல வகையான உணவு வகைகளை கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.