கல்விப் பாதுகாப்புக்குழுக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, அக்.3- கல்விப் பாதுகாப்பு குழு சார்பில் அடுத்த தலைமுறைக்கான கல்வி என்ற தலைப்பில் புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் திங்கள் கிழமையன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்வி பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எம்.அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட உணவ உரிமையாளர் சங்கத் தவைலர் சண்முக பழனியப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் க.கருப்பையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘அடுத்த தலைமுறைக்கான கல்வி’ என்ற தலைப்பில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரையாற்றினார்.
கவுரவிப்பு
கருத்தரங்கில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறைசென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத் தோழர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞதர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வரவேற்க, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயலாளர் எம்.வீரமுத்து நன்றி கூறினார். கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
-இரா.பகத்சிங்