இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர்- 20 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிக ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

hindi issue dmk strike postponed mk stalin announced

Advertisment

Advertisment

தமிழக ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர்- 20 ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். செப்டம்பர்- 20 ஆம் தேதி ஏன் போராட்டம் நடத்தவுள்ளீர்கள் என்று ஆளுநர் கேட்டதாக மு.க.ஸ்டாலின் கூறினார். மத்திய அரசு எந்த வகையிலும் இந்தி திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்துள்ளதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தி திணிப்பை திமுக என்றும் எதிர்க்கும் என்றார்.