Skip to main content

வெளியான வீடியோ.! மாணவன் சாவில் தொடரும் மர்மம்.!!!

Published on 21/07/2018 | Edited on 27/08/2018

 

udaiyar


 

 தூத்துக்குடி மாவட்டம்  கயத்தாறில் கடந்த சில நாட்களுக்கு முன்  பாழுங்கிணற்றில் பள்ளி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். " மகனின் சாவில் மர்மம் உள்ளது!" என இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் சந்தேகத்தை எழுப்பிய வேளையில், " பள்ளியில் தலை சீவுவதில் ஏற்பட்ட தகராறில் சக மாணவனை அடித்தான் இறந்த இந்த மாணவன். இவனின் தாக்குதலால் அந்த மாணவன் மயக்கமடையவே, இதற்கு நாம் காரணமாகிவிட்டோமோ..? என மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்" என பள்ளி நிர்வாகம் கூறியதோடு மட்டுமில்லாமல் இறந்த மாணவன் சக மாணவனைத் தாக்கும் வீடியோக் காட்சியை வெளியிட, கயத்தாறில் பதட்டம் அதிகரித்துள்ளது.

 

  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள தெற்கு மயிலோடையை சேர்ந்தவர் பீட்டர். இவர் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய 3வது மகன் தான் இறந்துப் போன மாணவன் உடையார். இவர் கயத்தாறில் உள்ள பாத்திமா உயர்நிலைபள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி கடம்பூர் சாலையில் உள்ள இசக்கிபாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உடையார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  உடையார் சடலமாக கிடந்த அன்று வகுப்பில் உடையாருக்கும்,  வடக்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மாரிச்செல்வத்திற்கும் இடையே தலைசீவுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவெருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் உடையார் தாக்கியதில் மாரிச்செல்வம் மயக்கமடைய, உடையார் பயந்து போய் பள்ளி விட்டு போய் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. பள்ளி நிர்வாகத்தின் கூற்றினை தொடர்ந்து உடையார் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கி இறுதி சடங்கு செய்தனர். இந்நிலையில் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக உடையார், மாரிச்செல்வத்தினை தூக்கி அடிப்பது போன்ற காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியானது,   

 

    " பள்ளி நிர்வாகம் தங்கள் கூற்றுக்கு வலுச்சேர்ப்பதாக இந்த வீடியோவினை வெளியிட்டது. ஆனால் அவன் பள்ளியில் இருந்த வெளியே செல்லும் காட்சியை தர மறுப்பதேன்..?இதில் மர்மம் இருக்கின்றது. ஏன்..? பள்ளி நிர்வாகத்தினரே அடித்து கொலை செய்து விட்டடிருக்கலாமே..?" என குற்றம் சாட்டுகின்றனர் இறந்த மாணவனின் பெற்றோர்கள். காவல்துறையினரோ., " இறந்து போன உடையார், பயத்தில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும், அடித்து கொலை என்று கூற முடியாது இருந்தாலும், உடையாரின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது. தலைசீவும் சீப்புக்காக நடைபெற்ற மோதல், ஒரு உயிரை பலி வாங்கியது சகிக்க இயலாதது.

சார்ந்த செய்திகள்