Published on 07/10/2022 | Edited on 07/10/2022

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் ஒன்பதாம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.