காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக சிறு, குறு தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசனின் தாய் மோ.ராஜாமணி அம்மாள் (வயது 83) நேற்று (10ஆம் தேதி) இரவு 10.00 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று அமைச்சர் தா.மோ. அன்பரனுக்கு ஆறுதல் சொல்லினர். மேலும், ராஜாமணி அம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ராஜாமணி அம்மாள் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு ஆறுதல் கூறினார்.

Advertisment