அண்ணாபல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.டெக்படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் எனசென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைநடத்ததமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், பையோடெக்னாலஜி, கம்பியூடேஷனல்ஆகிய இரண்டு எம்.டெக்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைநிறுத்தப்பட்டது. இதுதொடர்பாகமாணவர்களான சித்ரா,குழலிஆகியோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தவழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் அந்தக் குறிப்பிட்ட இரண்டு எம்.டெக் படிப்பில் இந்த ஆண்டேமத்திய அரசின்49.5 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கையைநடத்தசென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.