புதுச்சேரி : சம்பள பாக்கி தராததை கண்டித்து பாசிக் ஊழியர்கள் 'ஆயுத பூஜை' போராட்டம்!
சம்பள பாக்கி தராததைக் கண்டித்து பாசிக் ஊழியர்கள் சாலையோரத்தில் ஆயுதபூஜை என்கிற பெயரில் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பாசிக் ஊழியர்களுக்கு சுமார் 20 மாதத்திற்கு மேலாக சம்பளம் போடாமல் அரசு அவர்களை வஞ்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் வழக்கமாக ஆயுத பூஜையை ஊழியர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய நிலையில், அவ்வாறு கொண்டாட முடியாத நிலையை அரசு ஏற்படுத்திருக்கிறது.
இதை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று சாலையோரத்தில் ஆயுதபூஜை கொண்டாடி அரசின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டினர்.

- சுந்தரபாண்டியன்