ராதாபுரம் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கடைசி மூன்று சுற்றுகளின் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரங்களில் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளின் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அத்துடன் 203 தபால் வாக்குகளும் எண்ணப்பட்டன. இதனை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தேர்தல் ஆணைய அலுவலர்கள் 24 பேர் வாக்குகளை எண்ணும் பணியை ஈடுபட்டனர். இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விவரங்களை நீதிபதி ஜெய்சந்திரனிடம் பதிவாளர்கள் சமர்ப்பித்தனர். இருப்பினும் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Advertisment

RADHAPURAM ASSEMBLY ELECTION VOTE RE COUNTING FINISH

கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடை மூன்று சுற்று வாக்குகளும், 204 தபால் வாக்குகளும் மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.