ராமஜெயம் கொலை வழக்கு குறித்து தகவல் அளிப்போருக்கு
ரூ.2 லட்சம் வெகுமதி!
ராமஜெயம் கொலை குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்று மதுரை உயர் நீதி மன்றத்தில் 9 முறைக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 5 வருடம் கழித்து துப்பு கொடுத்தால் 2 இலட்சம் பரிசு என்று அறிவித்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி போலிஸ்.
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகரத்தை சேர்ந்த ராமஜெயம் 29.03.2012 அன்று அதிகாலை நடைபயிற்சிக்காக செல்லும்போது கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையின் தீவிர புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கை துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்போருக்கு ரூ.2 லட்சம் பண வெகுமதி அளிக்கப்படும் அறிவிக்கப்படுகிறது. இவ்வழக்கு குறித்த பயனுள்ள தகவல்களை தொலைபேசி, கைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அளிக்க முன் வருமாறு பொது மக்கள் வேண்டப்படுகின்றனர். தகவல் அளிக்கும் நபர் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டியதில்லை. தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்படுகின்றது.
இவ்வழக்கு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு என்று 24 மணி நேரமும் 044-28511600 என்ற தொலைபேசி எண்ணிலும், 99400 22422, 99400 33233 என்ற மொபைல்/ வாட்ஸ் அப் எண்களிலும் தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜெ.டி.ஆர்