Skip to main content

குமரி மாவட்டத்தில் 100 கிராம நிா்வாக அதிகாாிகள் கைது

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
v

 

குமாி மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அதிகாாிகள் கைது செய்யப்பட்டதால் வருவாய் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


              கடந்த 10 நாட்களாக கிராம நிா்வாக அதிகாாிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் கூடுதலாக பொறுப்பில் உள்ளவா்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும். அடங்கல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள்  உள்ளிட்டவைகள் கணிணியில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு அதிவேக இணையதள சேவையுடன் கூடிய கணிணி வழங்க வேண்டும்.

 

v


             இதே போல் உட்பிாிவு பட்டா மாறுதல் உட்பட அனைத்து வித பட்டா மாறுதல்களிலும் கிராம நிா்வாக அதிகாாியின் பாிந்துரையை கட்டாயமாக்க வேண்டும் என கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இதனால் பொதுமக்களுக்கான சேவையும் கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டு வந்தது. மேலும் அரசும் இவா்களின் கோாிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. 

 

v


                  இதனால் இன்று குமாி மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அதிகாாிகள் வடிவீஸ்வரம் அரசு கால்நடை மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தை நடத்தி விட்டு கலெக்டா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா். இதனை தொடா்ந்து அவா்களை போலிசாா் கைது செய்தனா். இது வருவாய் துறை ஊழியா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                                   

சார்ந்த செய்திகள்