ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக நாடு தழுவிய பிரச்சனையாக வெங்காய விலை உயர்வு உருவெடுத்துள்ளது.

Advertisment

MKStalin about onion price

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். "முன்பெல்லாம் வெங்காயத்தை உரிக்கும் போதுதான் கண்ணீர் வரும், இப்போது வெங்காய விலையை நினைத்துப் பார்த்தாலே கண்ணீர் வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக் கிடக்கிறது" என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.