Skip to main content

சார்பதிவாளர் அலுவலகம் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
சார்பதிவாளர் அலுவலகம் மூடப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்



கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தொழுதூரில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகத்தை மூடிவிட்டு திட்டக்குடி சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவை கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடலூர் மேற்கு மாவட்ட  செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த சார்பதிவாளர் அலுவலகம் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது அமைக்கப்பட்டது.  இந்த அலுவலகத்தை மூடுவதற்கு முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும், இந்த முயற்சியை கைவிடாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை மிக பெரியளவில் திமுக தலைமையில் நடத்துவோம் எனவும் கணேசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்