நாமக்கல் ஐஐடி குழுவினர் திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க எடுத்த முயற்சிகள் அனைத்தும்தொய்வுற்றநிலையில் தற்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வீரமணி என்பவர் தலைமையிலான குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

Advertisment

Pudukkottai team visits after 11 hours of efforts

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேரில் இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த குழு தற்போது மீட்பு பணியில் இறங்கியுள்ளது. குழந்தை சுஜித் தற்போது 27 அடியிலிருந்து 68 அடிக்கும் கீழே சென்றுள்ள தகவலும் கிடைத்துள்ளது. சுவாசம் சீராக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது புதுக்கோட்டை குழுவினர் அவர்கள் கொண்டுவந்த கருவியை வைத்து குழந்தையை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளனர். அதற்கான செயல் முறை விளக்கத்தைஅமைச்சர் விஜயபாஸ்கரிடம் அவர்கள் செய்து காண்பித்து வருகின்றனர்.