பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் !

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எடப்பாடி அரசு நடத்தி வருகிறது. அதுபோல் தேனி மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 4ம்தேதி நடக்க இருக்கிறது. இதற்காக துணை முதல்வர் ஒபிஎஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசானைக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் மாலை 4மணிக்கு எல்லாம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தும்கூட துணனமுதல்வர் இந்த ஆய்வு கூட்டத்திற்கு ஐந்து மணிக்கு தான் வந்தார்.
அப்படி வந்த துணைமுதல்வரும் கூட பத்தே நிமிடத்தில், நடக்க இருக்க கூடிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான பயணாளிகளை அழைத்து வரவேண்டும் என்று கூறி ஆய்வு கூட்டத்தை முடித்து வைத்து விட்டு புறப்பட்டார். ஆனால் எப்போதும் முகத்தில் புண்சிரிப்புடன் காணப்படும் ஒபிஎஸ் இந்த ஆய்வு கூட்டத்திற்கு முகத்தில் கலை இழந்து போய் காணப்பட்டார். அந்த அளவுக்கு ஒபிஎஸ்சே மனம் நொந்து போய் இருக்கிறார் என்பது தெரிகிறது.
-சக்தி