Skip to main content

மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்

Published on 11/05/2025 | Edited on 11/05/2025
 Actor Vishal faints on stage

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் நடைபெற்ற 'மிஸ் திருநங்கை' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார். அதே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பொன்முடியும் பங்கேற்றுள்ளார். நடிகர் விஷால் மேடையில் பேசி முடித்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென விஷால் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அங்கு உடனிருந்தவர்கள் நடிகர் விஷாலை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்