/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cuddalore-art.jpg)
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி கவிதா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.
ஆறுமுகத்தின்கடைக்கு கவிதாபட்டாணி வாங்கச் சென்ற போது இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாடைவில்திருமணத்தை மீறிய உறவாகமாறியது. இருவரும் விருத்தாசலம் பகுதியில்வீடு ஒன்றை வாடகைக்குஎடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தி(வயது 55). இவர் ஆறுமுகத்தின் நண்பர்.ஆறுமுகத்தை பார்க்க அடிக்கடி விருத்தாசலம் சென்ற வைத்திக்கும் ஆறுமுகத்துடன் வசித்து வந்த கவிதாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆறுமுகத்திற்கு தெரிய வரவே கவிதாவை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கவிதா ஆறுமுகத்திடம் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் கையில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு கவிதாவுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்துள்ளார். கிள்ளனூரில் உள்ள வைத்திவீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வைத்தியம் கவிதாவும் தனிமையில்இருந்துள்ளனர். இதை கண்டு கோபமடைந்த ஆறுமுகம் தன்னுடன் வருமாறு கவிதாவை அழைத்துள்ளார். இதனால் கவிதா, ஆறுமுகம், வைத்தி மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை கவிதா மேல் ஊற்றுவதற்கு முயல கவிதாவும் வைத்தியும் ஆறுமுகம் மீது அந்த பெட்ரோலை ஊற்றிதீ வைத்துள்ளனர்.
இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரைமீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார்.இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கவிதா மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்தி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)