இலங்கை துணைத் தூதரகம் முன்
மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது சிங்கலர்கள் தாக்க முயற்சி செய்ததை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் மதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் இலங்கை துணைதூதரகத்தை முற்றுகையிட பேரணி சென்றனர். ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
தடையை மீறி இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
படங்கள் - எஸ்.பி.சுந்தர்