Skip to main content

ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்! போலீசார் திணறல்!

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
 vck 1


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, வீரர்கள் தங்கும் ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 13 துணை ஆணையர்கள் தலைமையில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

pro


காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. மைதானத்தின் உள்ளே 2,300 காவலர்களும், வெளியே மற்றும் அண்ணாசாலை வரை 2000-க்கு மேற்பட்ட காவலர்களும் குவிப்பு. 4 கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரலாற்றிலேயே தற்போதுதான் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி உள்ள சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
 

pro


இந்நிலையில், சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி விசிகவினர் திருவல்லிக்கேணியில் இருந்து மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதேபோல், எஸ்டிபிஐ கட்சியினர், ரஜினி மக்கள் மன்றத்தினர், நாம் தமிழர் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்