Dhaswanth acquitted in the case of thrash his mother A horrific incident that took place in 2017

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால், சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தஷ்வந்துக்கு தூக்குத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதற்கிடையில் தாய் சரளாவைக் கொலை செய்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வகையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நடந்த விசாரணையின் போது, தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறினார். இதனால், இந்த கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லையென்று கூறிதாயைக் கொலை வழக்கில் இருந்து தஷ்வந்தை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இருப்பினும், சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த், இன்னுமும் சிறையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.