Skip to main content

கஞ்சா கடத்திய இருவர் கைது

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
கஞ்சா கடத்திய இருவர் கைது

சேத்துப்பட்டு எஸ்.எம். சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்கள் வந்த பைக்கின் பெட்டியை திறந்து சோதனை செய்தபோது, அதில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. 

விசாரணையில் சேத்துப்பட்டு எஸ்.எம்.நகர் முதல் தெருவை சேர்ந்த விஜயசரண்(20), சேத்துப்பட்டு பிருந்தாவன் 4வது தெருவை சேர்ந்த விஜயகுமார்(31) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்